Connect with us

மறைந்த கராத்தே ஹுசைனி நடித்த கடைசி படம் எது தெரியுமா?

Featured

மறைந்த கராத்தே ஹுசைனி நடித்த கடைசி படம் எது தெரியுமா?

2001ஆம் ஆண்டு வெளியான ‘பத்ரி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் உடற்பயிற்சியாளராக நடித்திருந்தவர் கராத்தே ஹுசைனி. கராத்தே பயிற்றுவிப்பாளராக தன்னிச்சையாக செயல்பட்டிருந்தாலும், ‘பத்ரி’ திரைப்படமே அவருக்கு பிரபலத்தையும், திரை உலகிற்கு அடையாளத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ‘அதிரடி சமையல்’ எனும் சமையல் நிகழ்ச்சி மூலம், மேலும் பலரது பாராட்டுகளையும், பொதுமக்களின் மனங்களில் இடம் பிடிக்கும்படியான நல்ல பெயரையும் பெற்றார்.

2022ஆம் ஆண்டு வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்ட பலருக்கும் கராத்தே பயிற்சி அளித்தவர் ஹுசைனி. சினிமாவைத் தாண்டியும், கராத்தே மற்றும் வில் வித்தை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இதுவரை 400-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஹுசைனி, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் கடைசியாக நடித்துள்ள ‘Chennai City Gangsters’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. வைபவ் மற்றும் அதுல்யா நடித்திருக்கும் இப்படம், வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..

More in Featured

To Top