Connect with us

அன்புமகள் பவதாரணி மறைவு – இளையராஜாவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி.

Cinema News

அன்புமகள் பவதாரணி மறைவு – இளையராஜாவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி.

உடல்நலக்குறையால் உயிரிழந்த இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் மறைவுக்கு கனிமொழி எம்.பி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் யாராலும் பெற முடியாத புகழை பெற்று திரையுலகின் பொக்கிஷம் என ரசிகர்களால் அன்போடு போற்றப்படுபவர் இசைஞானி இளையராஜா . இவருக்கு பவதாரணி என்ற மகளும் , கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு மகன்களும் உள்ளனர் .

தந்தையை போல் மூவருமே இசை சார்ந்த விஷயங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இதில் தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் அதிகம் பாடியுள்ளார் பவதாரிணி . இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு பாடலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணி பெற்றுள்ளார் .

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 25 ஆம் தேதி உயிரிழந்தார் .

பாவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் மறைந்த பின்னணி பாடகி பததாரிணியின் மறைவிற்கு பலரும் இறங்களும் ஆறுதலும் தெரிவித்து வரும் நிலையில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜாவை நேரில் சந்தித்த கனிமொழி எம்.பி மனமுருக ஆறுதல் தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top