Connect with us

“உதிரத்துடன் உதிரன்… மிரட்டும் கங்குவா படத்தின் புதிய Character Poster! Viral!”

Cinema News

“உதிரத்துடன் உதிரன்… மிரட்டும் கங்குவா படத்தின் புதிய Character Poster! Viral!”

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட் ஒன்றையும் கூறியுள்ளனர்.

நடிகர் சூர்யா 10 கெட்டப்புகளில் நடித்துவரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படம் தமிழ் உட்பட 10 மொழிகளில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் சூர்யாவின் திரையுலக வாழ்வில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இன்று காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், உதிரன் என்ற கேரக்டரின் போஸ்டர். மேலும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உதிரன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷலாக இதை வெளிட்டுள்ளனர்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top