Connect with us

‘காஞ்சனா 4’ புதிய போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!

Cinema News

‘காஞ்சனா 4’ புதிய போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து 2015-ல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019-ல் ‘காஞ்சனா 3’ வெளியாகி ஹாரர் – காமெடி ஜானரில் வெற்றி பெற்றன.தற்போது ‘காஞ்சனா 4’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி வருகிறார். அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேஹி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அதிரடி போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும், ‘காஞ்சனா’ திரைப்பட வரிசையில் இது கடைசி பாகமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் திரைக்கு கொண்டு வர படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

புதிய போஸ்டரில் ராகவா லாரன்ஸ் மிரட்டலான தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாரர் மற்றும் காமெடி கலந்த காட்சிகளுடன் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. ‘காஞ்சனா 4’ தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top