Connect with us

“KH 234 படத்தின் பெயர் இதுதானா?! வெளியான வைரல் வீடியோ!”

Cinema News

“KH 234 படத்தின் பெயர் இதுதானா?! வெளியான வைரல் வீடியோ!”

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’KH 234’ திரைப்படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா இணைந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இன்னொரு பிரபல ஹீரோ இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து வேற லெவலில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கமல்ஹாசனின் 234வது படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷாவை அடுத்து தற்போது ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக கமல்ஹாசன் உடன் ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ளார் என்பதும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது அதில் படத்தின் பெயர் thug life என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ பார்க்கவே மிகவும் வித்தியாசமாக உள்ளது. அதில் கமல் “என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர், காயல்பட்டினக்காரன் பிறக்கும்போதே என் தலையில் எழுதிட்டாங்க கிரிமினல், யாகூசா.. யாகூசா னா ஜப்பான் மொழியில Gangster னு சொன்னாங்க… காலம் என்ன தேடி வந்தது இது முதல் முறை இல்லை, கடைசி முறையும் இல்லை..!” கடைசியாக “ரங்கராய சக்திவேல் நாயக்கர்! ஞாபகம் வச்சிக்கோங்க..!” இதை பார்க்கவே படம் ஒரு தரமான செய்கை போல தோன்றுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்திடுக - TTV தினகரன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top