Connect with us

“கல்கி 2” படத்தில் கமல் ஹாசன் சம்பளம் – 100 கோடி வரை?

Cinema News

“கல்கி 2” படத்தில் கமல் ஹாசன் சம்பளம் – 100 கோடி வரை?

தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Kalki 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகம் Kalki 2 குறித்து புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பிரமாண்ட பான்-இந்தியா படத்தில் முக்கிய எதிரி கதாபாத்திரத்தில் Kamal Haasan நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் குறுகிய காட்சியில் தோன்றியிருந்தாலும், அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது.

அப்போது அவருக்கு சுமார் ₹20 முதல் ₹25 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது உருவாகி வரும் Kalki 2 படத்தில் அவரது கதாபாத்திரம் முழு அளவில் முக்கியத்துவம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இந்த முறை அவர் பெறும் சம்பளம் ₹80 முதல் ₹100 கோடி வரை இருக்கலாம் என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இந்திய சினிமா வரலாற்றிலேயே உயர்ந்த சம்பளங்களில் ஒன்றாக பதிவாகும். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, Kalki 2 திரைப்படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயின் ஆன்மீக பயணம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது!

More in Cinema News

To Top