Connect with us

ப்ரீ புக்கிங்கில் மிரளவைக்கும் சாதனை படைத்த கல்கி 2898 AD – முழு விவரம் இதோ..!!

Cinema News

ப்ரீ புக்கிங்கில் மிரளவைக்கும் சாதனை படைத்த கல்கி 2898 AD – முழு விவரம் இதோ..!!

ஒட்டுமொத்த இந்திய சினிமாவை ஒரே ட்ரைலரில் திரும்பி பார்க்கவைத்த ‘கல்கி 2898 AD’ திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மிரளவைக்கும் சாதனை படைத்தள்ளதாக அசத்தலான தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரையுலகில் இருக்கும் பேமஸ் ஆன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ் . இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898 AD .

நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்துவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பிரம்மாண்ட ட்ரைலரை படக்குழு வெளியிட்டது.

ட்ரைலரில் வரும் ஒவ்வரும் காட்சியும் இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில் அட்டகாச காட்சிகளாக அமைந்துள்ளது. ட்ரைலரில் வரும் கிராபிக்ஸ் காட்சிங்கள் ஹாலிவுட் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருந்தது .

இந்நிலையில் தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இம்மாத இறுதியில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் மிரளவைக்கும் சாதனை படைத்தள்ளதாக அசத்தலான தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் இதுவரை USA ப்ரீ புக்கிங்கில் 1 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்த ஹிப்ஹாப் ஆதி - புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் இதோ..!!

More in Cinema News

To Top