Connect with us

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி வழங்கிய சன் குழுமம் தலைவர் கலாநிதிமாறன்..!!

Cinema News

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி வழங்கிய சன் குழுமம் தலைவர் கலாநிதிமாறன்..!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சன் குழுமம் தலைவர் கலாநிதிமாறன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி வழங்கியுள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன . இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் அத்யாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர் .

வரலாறு காணாத இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திரை பிரபலங்கள் பலரும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் தலைவர் கலாநிதிமாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சன் குழுமம் தலைவர் கலாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top