Connect with us

40வது பிறந்த நாளில் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு வெளியானது!

Featured

40வது பிறந்த நாளில் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு வெளியானது!

2004ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தில் ஹோ கயா நா திரைப்படத்தின் மூலம் ஹிந்திப் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குநர் பேரரசு இயக்கிய பழனி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

தெலுங்கில் லட்சுமி கல்யாணம், சந்தமாமா போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். பின்னர் ராம் சரணுடன் நடித்த மகதீரா திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காஜல், தற்போது திருமணமான பின்னர் குடும்ப வாழ்க்கையில் நிலைத்து இருக்கிறார். அவ்வப்போது தேர்ந்தெடுத்த சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

2020ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சிலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் கிச்சிலு என்ற மகன் உள்ளார். இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடும் காஜல் அகர்வாலுக்கு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சொந்தமாக வைத்திருக்கும் சொத்துகள் மதிப்பு சுமார் ரூ. 80 கோடியாகும் என கூறப்படுகிறது. கடைசியாக அவர் நடித்த சிக்கந்தர் திரைப்படத்திற்கு அவர் ரூ. 5 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சர்ச்சைக்கு நடுவில் ஜாலியாக நடனம் ஆடும் ரவி மோகன் – வைரலாகும் வீடியோ!

More in Featured

To Top