Connect with us

மோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமர் ஆகும் தகுதி இல்லையா – அதிரடி காட்டிய கே.பி. முனுசாமி

Featured

மோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமர் ஆகும் தகுதி இல்லையா – அதிரடி காட்டிய கே.பி. முனுசாமி

பாஜகவில் இருக்கும் பல கோடி தொண்டர்களில் மோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமர் ஆகும் தகுதி இல்லையா? என கடுமையாக விமர்சிக்கும் வகையில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசை கண்டித்து வேலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்று சிறப்பு அழைப்பாளராக கே.பி. முனுசாமி கலந்துகொண்டு அனல் பறக்கும் கண்டன உரையாற்றினார்.

ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் திமுக அரசு இதுவரை தமிழக முன்னேற்றத்திற்காக எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும், பாஜகவில் உள்ள பல கோடி தொண்டர்களில் மோடியை தவிர வேறு யாருக்கும் பிரதமர் ஆகும் தகுதி இல்லையா?

அரசியல் நாகரீகம் தெரியாமல் அண்ணாமலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் போலவே ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

ராமர் கோவில் விவகாரத்தை அதிமுக அரசியலாக்க விரும்ப வில்லை. ஒரு தரப்பினர் ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கி அதில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த அதிமுகவினர் இடையே எழுச்சி உரையாற்றி பல காட்சிகளை விமர்சிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top