Connect with us

ஜீவா நடிப்பில் உருவான பிளாக் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

ஜீவா நடிப்பில் உருவான பிளாக் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜிவா . இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் பல படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜீவாவின் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே பிளாக் . பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜீவாவின் ‘பிளாக்’ திரைப்படம், வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிறப்பு போஸ்டர் மூலம் பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top