Connect with us

ஜெயம் ரவி: விஷாலின் மனசுக்கு கண்டிப்பாக அது நடக்கும்!

Featured

ஜெயம் ரவி: விஷாலின் மனசுக்கு கண்டிப்பாக அது நடக்கும்!

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பிறகு, விஷால் நடிப்பில் ரத்னம் படம் வெளியானது, ஆனால் அது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இப்போது, விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால், மேடையில் நடுங்கிக் கூறும்போது, பலர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.

இந்நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, விஷால் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் கூறியதாவது: “விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான். விரைவில் இதில் இருந்து மீண்டு வருவான். அதற்கு அவன் தைரியம் துணை நிற்கும்.

என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவில் சிங்கம் போல் மீண்டு வருவான்.”ஜெயம் ரவியின் இந்த வார்த்தைகள், விஷாலுக்கு ஆதரவையும், ஊக்கமும் அளிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸில் எலிமினேட் ஆகி வீட்டுக்கு வந்த அருணை வரவேற்ற அர்ச்சனா!

More in Featured

To Top