Connect with us

ஏப்ரல் 30 ரிலீஸுக்கு தயாராகும் ‘ஜனநாயகன்’.. சென்சார் சான்றிதழ் ஏப்ரல் 24க்குள்!

Cinema News

ஏப்ரல் 30 ரிலீஸுக்கு தயாராகும் ‘ஜனநாயகன்’.. சென்சார் சான்றிதழ் ஏப்ரல் 24க்குள்!

தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு சென்சார் சான்றிதழை CBFC ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான KVN நிறுவனம், தமிழ்நாடு விநியோகஸ்தர்களுக்கு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதி குறித்து நேரடியாக ஆலோசிக்க சென்னை வருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், படக்குழு ஏப்ரல் 30ஆம் தேதி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் சூழல், சென்சார் அனுமதி மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட லீக் சர்ச்சை போன்ற சவால்களை கடந்து ‘ஜனநாயகன்’ ரிலீஸ் பக்கம் நகர்வது விஜய் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வடசென்னை 2 மாஸாக வரும்… தனுஷ் கொடுத்த ஒரு வரி அப்டேட் ரசிகர்களை குஷிப்படுத்தியது!

More in Cinema News

To Top