Connect with us

ஒரு படத்திற்கு HYPE கொடுப்பது நல்லதில்ல – THE GOAT’ பட தயாரிப்பாளர் அர்ச்சனா ஓபன் டாக்..!!

Cinema News

ஒரு படத்திற்கு HYPE கொடுப்பது நல்லதில்ல – THE GOAT’ பட தயாரிப்பாளர் அர்ச்சனா ஓபன் டாக்..!!

ஒரு படத்திற்கு ஓவராக HYPE கொடுப்பது நல்லதில்லை என தி கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வேற லெவெலில் உருவாகி வரம் திரைப்படமே தி கோட் . யுவன் இசையில் AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு படத்தின் டிரைலரும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருப்பது செம வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அர்ச்சனா கூறிருப்பதாவது :

HYPE எனும் மிகையான எதிர்பார்ப்பு இருப்பது ஒரு படத்திற்கு நல்லது கிடையாது. அது, ஒரு புத்தகத்தை படித்துவிட்டு படம் பார்க்கப் போவது போன்ற விஷயம். ரசிகர்கள் அனைவருமே மனதில் தங்களுக்கென தனி எதிர்பார்ப்பு வைத்திருப்பார்கள்.

ஒரு இயக்குநர் அனைவரது எண்ணங்களையும் உணர்ந்து படமெடுப்பது சாத்தியமல்ல. அதனால்தான் GOAT-க்கு HYPE இருக்கக் கூடாது என முன்பே முடிவு செய்து, குறைவான அப்டேட்கள் கொடுத்து, நேரடியாக ட்ரெய்லர் மட்டும் வெளியிட்டோம் என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  GOAT படத்தில் கேமியோவாக நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top