Connect with us

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Featured

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

ஆன்லைன் ரம்மி சூதாட்ட நிறுவனத்திடம் 500 கோடி வாங்கியுள்ளது திமுக. சூதாட்ட பணத்தை வாங்கியுள்ளார் ஸ்டாலின். பல உயிரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்ட நிறுவனத்திடம் 509 கோடி பணம் வாங்க திமுகவுக்கு எப்படி மனம் வந்தது?

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம். அன்று நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு வராததால் நீட் தேர்வு அமல்படுத்த வேண்டிய சுழல் ஏற்பட்டது .

அதிமுகவை உடைக்க எவ்வளவோ முயன்றீர்கள். எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்தீர்கள். எவ்வளவு தடை வந்தாலும், அத்தனையையும் தகர்ந்தெரிந்து, அதிமுக இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top