Connect with us

அறிவழகன் – ஆதி கூட்டணியில் உருவான ‘சப்தம்’ பட டீசர் வெளியானது..!!!

Cinema News

அறிவழகன் – ஆதி கூட்டணியில் உருவான ‘சப்தம்’ பட டீசர் வெளியானது..!!!

அறிவழகன் – ஆதி கூட்டணியில் உருவான ‘சப்தம்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆதி. இவரது நடிப்பில் பல படங்கள் வெளி வந்து நல்ல வரவேற்பை பெற்றாலும் இவருக்கான அங்கீகாரம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.

நல்ல கதை தேர்வு நல்ல நடிப்பு என அனைத்திலும் சிறப்பாக இருந்தாலும் மக்களின் பார்வை இவர் மேல் பட கிடைக்கும் அற்புதமான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொன்டே இருக்கிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் சப்தம் .

ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் தான் சப்தம் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இப்படம் ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இதோ அந்த டீசரை பார்த்து எப்படி உள்ளது என்பதை கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : ராஜஸ்தானிடம் மீண்டும் பணிந்தது மும்பை அணி..!!!

More in Cinema News

To Top