Connect with us

“என்னால் நடக்க முடியாமல் போகும் வரை IPL ஆடுவேன்! RCB Player கிளென் மேக்ஸ்வெல் பேச்சு!”

IPL

“என்னால் நடக்க முடியாமல் போகும் வரை IPL ஆடுவேன்! RCB Player கிளென் மேக்ஸ்வெல் பேச்சு!”

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப், ICC 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன்களான ஆஸ்திரேலியா அடுத்த ஆண்டு மே.இ.தீவுகள் மற்றும் யுஎஸ்ஏ-யில் நடைபெறும் T20 உலகக் கோப்பையையும் வெல்ல திட்டமிட்டு வருகிறது. IPL தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக ஆடி வருவதுதான் இந்திய பிட்ச்கள் பற்றிய ரோகித் சர்மாவுக்கும் தெரியாத புதிர்களை ஆஸ்திரேலியா தெரிந்து வைத்துள்ளது. அதனால்தான் 2023 உலகக் கோப்பையை வென்றது.

2021 T20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. 2022-ம் ஆண்டு T20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. கிளென் மேக்ஸ்வெல் உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 91/7 என்ற நிலையிலிருந்து அதிரடி இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்தார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த T20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த சதம் வீணாகுமாறு ஒரு அதிரடிச் சதத்தை எடுத்து ஆஸ்திரேலியாவின் ஒரே வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தார்.

இந்நிலையில், RCB அணிக்கு மீண்டும் 2024 IPL தொடரில் ஆடவிருக்கும் கிளென் மேக்ஸ்வெல் கூறியதாவது, “நான் விளையாடும் கடைசி தொடர் எதுவாக இருக்குமென்றால் அது நிச்சயம் IPL தொடராகவே இருக்கும். என்னால் நடக்க முடியாது போகும் வரை நான் IPL தொடர்களில் ஆடவே செய்வேன்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் IPL பங்களிப்பு செய்தது போல் வேறு எதுவும் பங்களிப்பு செய்யவில்லை. சந்தித்த மனிதர்கள், பயிற்சியாளர்கள் அனைத்துமே மிகமிகப் பயனுள்ளவை. மேலும் பல சர்வதேச வீரர்களுடன் அளவளாவியது, கிரிக்கெட் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டது என்று IPL ஒரு முழு வாழ்வியலையே எனக்குக் காட்டியுள்ளது.

IPL வாழ்க்கை பாடமாக அமைந்தது. விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றோருடன் அளவளாவுவது, அவர்களுடன் ஆடுவது, அவர்களுடன் பேசுவது என்று அனுபவம் நம்மை வளம்பெறச் செய்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் நிச்சயம் IPL தொடரில் ஆடி அடுத்த உலகக்கோப்பை T20 நடைபெறும் மே.இ.தீவுகள் போன்ற அதே பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு இந்திய IPL தொடரில் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். மே.இ.தீவுகளில் வறண்ட பிட்சில் பந்துகள் சுழலும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே இந்த உலகக்கோப்பை முடிந்தவுடனேயே அடுத்த உலகக்கோப்பைக் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கி விட்டோம். பிக்பாஷ் T20 லீகும் ஒரு உற்சாகமான சம்மராக இருக்கும் என்று கருதுகிறேன். சரியான காரணங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று ஆஸ்திரேலிய அணியில் நம் இடத்துக்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திமுக அரசைக் கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!!

More in IPL

To Top