Connect with us

IPL 2024 : சொந்த மண்ணில் மீண்டும் சொதப்பிய RCB – லக்னோ அணி அசத்தல் வெற்றி..!!!

Featured

IPL 2024 : சொந்த மண்ணில் மீண்டும் சொதப்பிய RCB – லக்னோ அணி அசத்தல் வெற்றி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய லக்னோ அணி பெங்களூரு அணியை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் – கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆரமபம் முதல் அதிரடியாக விளையாடிய டி காக் எதிரணியின் பந்துகளை பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 20 ரன்களில் கேட்ச் மூலம் தனது விக்கெட்டை இழந்தார் அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் வந்த வழியில் அப்படியே திரும்பி சென்றார் .

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டிகாக் 56 பந்துகளில் 81 ரன்கள் குவித்து 17வது ஓவரில் வெளியேற்றினார்.

பின்னர் கடைசி கட்டத்தில் சீறிய நிக்கோலஸ் பூரன் 18ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை விளாசி மிரட்டினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 181 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இதில் டு பிளிஸ்சிஸ் 19 ரன்களில் ரன் அவுட் பொறுப்புடன் ஆடுவார் என்று பெரிதும் எதிர்பார்த்த விராட் கோலியும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஜத் படிதார் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிளென் மாக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆக அவரை தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வந்த வழியில் விருட்டென சென்றனர்.

இறுதியாக பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

See also  மம்மூட்டி–மோகன்லால் போஸ்டர்! Morse Code-ல் ரிலீஸ் தேதி 🔥

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top