Connect with us

விஜய் டிவி புகழ் நடிப்பில் உருவான Mr Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

Cinema News

விஜய் டிவி புகழ் நடிப்பில் உருவான Mr Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

விஜய் டிவி புகழ் நாயகனாக நடித்துள்ள Mr Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் புகழ் . இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றது மட்டுமல்லாமல் புகழுக்கு சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக இருந்தது .

வாய்ப்புகளுக்காக போராடிய காலம்போய், தற்போது புகழுக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் . Mr Zoo keeper படம் மூலம் புகழ் ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்.

முன்னதாக சந்தானத்துடன் சபாபதி, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அஜித்துடன் வலிமை, அருண் விஜய்யுடன் யானை போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள புகழ், Mr Zoo Keeper படத்தின் மூலம் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டீசரில் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படம் மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் தன்வீர் மிர் ஒளிப்பதிவில் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் என்பவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  SRH அணிக்கு கடின இலக்கை கொடுக்குமா RCB..? RCB டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!!!

More in Cinema News

To Top