Connect with us

IPL 2024 : இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

IPL 2024 : இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் தொடரின் இறுதி போட்டி சென்னையில் இன்று நடைபெறும் நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது . லீக் மற்றும் பிளே ஆப் போட்டிகள் முடிந்து தொடரின் கடைசி போட்டியான இறுதிப்போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் KKR – SRH அணிகள் மோதுகிறது.

இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுக்குள் வைக்க கொல்கத்தா அணியின் தயாராகி வருகிறது.

போட்டிக்கு முன் பேசிய SRH கேப்டன் பேட் கம்மிங்ஸ் கூறியதாவது :

இன்று என்ன எதிர்பார்க்க வேண்டும் என KKR பாய்ஸ்க்கு தெரியும் என நம்புகிறேன். இந்த சீசனில் எங்களுக்கு சவால் கொடுத்துள்ளதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன், ORANGE ARMY தங்களது சிறந்த ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக சேமித்து வைத்துள்ளனர் என பேட் கம்மிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இன்று நடைபெறும் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது எந்த அணி தோல்வி பெற்று இரண்டாம் இடம் பிடிக்கப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IND vs SA: “இந்தியா ஜெயிக்க ராகுல்தான் காரணம்… ஆனால் இந்த தவறு செய்யாதீங்க” – ஸ்ரீகாந்த்

More in Featured

To Top