Connect with us

அடேங்கப்பா குஜராத்தின் பந்துவீச்சை துவம்சம் செய்த சென்னை அணி – குஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!

Featured

அடேங்கப்பா குஜராத்தின் பந்துவீச்சை துவம்சம் செய்த சென்னை அணி – குஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

ரசிகர்களுடன் ஆரவாரத்துடன் நடைபெறும் இப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் – ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர் .

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இந்த ஜோடி குஜராத்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரச்சின் 46 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரை தொடர்ந்து களத்துக்கு வந்த ரஹானே, ருதுராஜுடன் கைகோத்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்காமல் 12 ரன்களில் பெவிலியன் நோக்கி சென்றார் . அடுத்து வந்த ஷிபம் தூபே வந்த வேகத்தில் 2 சிக்சர்களை விளாசி சி.எஸ்.கே ரசிகர்களை குசியாக்கினார் .

ஒரு பக்கம் தூபே அதிரடி காட்ட மறுபுறம் பொறுப்புடன் விளையாடி வந்த ருதுராஜ், 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார் .

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த தூபே அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து களத்துக்கு வந்த சமீர் ரிஸ்வி வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி 206 ரன்களைச் குவித்தது . இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணி களத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியை பெற போகிறது எந்த அணி முதல் தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top