Connect with us

வெற்றியுடன் தொடரை தொடங்கியது சிஎஸ்கே – ஜெர்ஸி கலர் மாறியும் ஆட்டத்தை மாற்றாத பெங்களூரு..!!

Featured

வெற்றியுடன் தொடரை தொடங்கியது சிஎஸ்கே – ஜெர்ஸி கலர் மாறியும் ஆட்டத்தை மாற்றாத பெங்களூரு..!!

நடப்பாண்டுக்கான IPL கிரிக்கெட் தொடரை சென்னை அணி அட்டகாசமான வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது .

முதல் நாளான நேற்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரராக டுப்ளிசஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

ஆரம்பத்தில் சென்னை அணியின் பந்துகளை பௌண்டரிகளுக்கு அனுப்பிய பெங்களூரு கேப்டன் டுப்ளிசஸ் மெல்ல மெல்ல அதிரடியை காட்ட தொடங்கினார். இதனால் ஆட்டம் லேசாக பெங்களூர் பக்கம் சென்றபோது முத்தாபிகுர் வீசிய பந்தில் டுப்ளிசஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து வந்த படித்தார் மற்றும் மேக்ஸ் வெல் இருவரும் ரன் எதுவும் எடுக்கமாம்ல் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி சென்றனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ராவத் மாற்று தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் பந்துகளை வெளுத்து வாங்கினார். பவுடரிகளுக்கும் சிக்ஸர்களும் பந்துகளை பறக்க சிறிது நேரம் சென்னை ரசிகர்களுக்கு வேர்துகொட்டவே ஆரம்பித்தது.

இறுதிவரை நின்ற இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை எடுத்துக்கொடுத்தது. இதையடுத்து இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த RCB அணி 173 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி சென்னை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரசின் ரவீந்திர களமிறங்கினர். இருவரும் வரும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க Power Playயில் அணிக்கு தேவையான ரன்கள் மளமளவென வந்தது.

இதோடு ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் ஆரம்பத்தில் ஜோடி சேர்ந்த இணை அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து களமிறங்கிய மிட்சல் மற்றும் ரகானே இருவரும் அதிரடி மிரட்ட அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. பின்னர் இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க அதிரடியில் மிரட்டிய டுபே மற்றும் ஜடேஜா இறுதி வரை நித்தமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இறுதியில் 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 என இலக்கை கடந்து சென்னை அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top