Connect with us

என் தலையை வெட்டிவிட்டு நீங்க மட்டும் ரொமான்ஸ் பண்றிங்களா..? லோகேஷை கலாய்த்த பிரபல நடிகை..!!

Cinema News

என் தலையை வெட்டிவிட்டு நீங்க மட்டும் ரொமான்ஸ் பண்றிங்களா..? லோகேஷை கலாய்த்த பிரபல நடிகை..!!

ஸ்ருதிஹாசனுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்துள்ள ரொமான்ஸ் குறித்து பிரபல நடிகை கலாய்த்து ட்வீட் செய்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்போது ரஜினியின் அடுத்த படத்திற்கான பணிகளில் செம பிசியாக இருந்து வருகிறார் .

இதற்கிடையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் கேட்டுக்கொண்டதால் காரணமாக அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆல்பம் பாடலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

“இனிமேல்” என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலுக்கு கமல்ஹாசனின் அன்பு மகளான ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருக்கிறார். இந்த பாடலின் வரிகளை உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் அதீத ஆர்வத்தை தூண்டியுள்ள இந்த கூட்டணியின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் இந்த பாடலின் டீசர் நேற்று வெளியானது.

இந்த ஆல்பம் டீசரில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் சேர்ந்து செய்திருக்கும் ரொமான்ஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வலம் வரம் நிலையில் ’விக்ரம்’ நடிகை காயத்ரி ’உங்கள் படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு, நீங்கள் மட்டும் என்ன எப்படி ரொமான்ஸ் பண்ணுகிறீர்கள்? என்று ஜாலியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

காயத்திரியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top