Connect with us

சென்னையில் இன்று சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல் – தொடர் வெற்றியை பெறப்போவது யார்..?

Featured

சென்னையில் இன்று சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல் – தொடர் வெற்றியை பெறப்போவது யார்..?

நடப்பாண்டுக்கான IPL தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

ஏற்கனவே தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி அதில் சிறப்பாக விளையாடி தொடரின் முதல் வெற்றியை ருசித்தது .

இதுபோல் இந்த பக்கம் மும்பை அணியுடன் தனது முதல் போட்டியை சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி அதில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியை பெற போகிறது எந்த அணி முதல் தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top