Connect with us

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Cinema News

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார் .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நகைச்சுவை நடிகர் சேஷு.

இந்த நிகழ்ச்சியில் நடித்த சந்தானம் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இன்று தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நகைச்சுவை நடிகர்களாக வலம் வருகின்றனர் .

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் திரையில் ஜொலித்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் சேஷூ .

சந்தானத்துடன் பல்வேறு படங்களில் நடித்த சேஷு சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் .

இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேஷு அனுமதிக்கப்பட்டார் .

மருத்துவமனையில் சோதனை செய்தபோது, அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார் .

திட்டத்தட்ட 30 வருடங்கள் மக்களை மகிழ்வித்து வந்த இந்த நகைச்சுவை கலைஞனின் உயிரிழப்பு . ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேஷுவின் மரணத்துக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொறுப்புடன் ஆடிய பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top