Connect with us

ஜூனில் வெளியாகிறது இந்தியன் 2 – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!!

Cinema News

ஜூனில் வெளியாகிறது இந்தியன் 2 – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!!

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன் . இதையடுத்து இப்படத்தின் 2 ஆம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு உருவாக ஆரம்பித்தது .

ஆனால் இப்படம் ஆரம்பித்த நாளில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது. ஒருகட்டத்தில் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது.

இந்நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்கா, சென்னை, சூரத் என பல இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதுமட்டுமின்றி இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

கலக்கலாக உருவாகி உள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் எப்பதான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படக்குழு தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அதிரடியான போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Cinema News

To Top