Connect with us

ஆப்கானை white wash செய்யும் முனைப்பில் இந்திய அணி – இன்று மூன்றாவது டி 20 போட்டி..!!

Featured

ஆப்கானை white wash செய்யும் முனைப்பில் இந்திய அணி – இன்று மூன்றாவது டி 20 போட்டி..!!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

இந்தியவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மல்லுக்கட்ட உள்ளது.

இதில் மொஹாலியில் உள்ள மைதானத்தில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தூபேவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2nd வது போட்டியிலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த தொடருக்கு தயாராக இந்த தொடர் மிகவும் உதவும் எனபதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2வது டெஸ்ட்: ரபாடா மாற்று அறிவிப்பு… மேலும் 2 SA வீரர்கள் காயம்?

More in Featured

To Top