Connect with us

ஆருயிர் நண்பர் ரஜினி நலமுடன் வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும் – இளையராஜா

Cinema News

ஆருயிர் நண்பர் ரஜினி நலமுடன் வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும் – இளையராஜா

இதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் தக்க சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கலக்கலாக உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் வேகமான நடையும் அவருக்கே உரித்தான ஸ்டைலில் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1 ஆம் தேதி இதய பிரச்னை காரணமாக சென்னியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கத்தை, அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறையில் வெற்றிகரமாக சரி செய்துள்ளதாகவும் தற்போது நலமுடன் இருக்கும் ரஜினிகாந்த் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஆருயிர் நண்பர் ரஜினி நலமுடன் வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா கூறியதாவது :

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக…என இளையராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் நிவின் பாலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் - போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

More in Cinema News

To Top