Connect with us

🎬 “Negativity எல்லை மீறினால் Block!” – சமந்தாவின் திறந்த மனசு பேச்சு

Cinema News

🎬 “Negativity எல்லை மீறினால் Block!” – சமந்தாவின் திறந்த மனசு பேச்சு

🎬 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, சமீபத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற கேள்வி–பதில் நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் குறித்து திறம்பட பேசியுள்ளார். “பாராட்டுகளும் விமர்சனங்களும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். ஆனால், அந்த negativity என் தனிப்பட்ட எல்லையை தாண்டி வந்தால் உடனே ப்ளாக் செய்து விடுவேன்” என்ற அவரது நேரடியான பதில் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

மேலும், இன்று பலருக்கும் இருக்கும் போல சமூக வலைதளப் பழக்கம் தன்னையும் சில நேரங்களில் பாதிக்கிறது என்றும், அதிலிருந்து மன அமைதியைப் பாதுகாக்க சில நாட்கள் தனது கணக்கை மூடி வைத்து புத்தகங்கள் படிப்பது, நீளமான உள்ளடக்கங்களை பார்த்து கவனம் செலுத்துவது போன்ற முறைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். உடல்நல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவின் இந்த நேர்மையான பகிர்வு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், திருமணத்திற்குப் பிறகு வெளியாக இருக்கும் அவரது புதிய படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 🎬✨

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top