Connect with us

விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் – நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஆதங்கம்..!!

Cinema News

விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் – நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஆதங்கம்..!!

நடிகர் ஜெயம் ரவி தன் மனைவியை பிரிய வேண்டி நீந்தி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எனக்கு விவாகரத்து வேண்டாம் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . அடுத்தடுத்து பல படங்களில் நடித்து திரை வாழ்க்கையில் வெற்றிகரமாக இருந்து வரும் இவருக்கு இல்லற வாழ்க்கை அவ்வளவு சரியாக இல்லை.

ஜெயம் ரவிக்கு ஆர்த்தி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர் . ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவி அவருடன் 15 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

மனைவிடம் விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் தற்போது பரஸ்பர விவாகரத்துக்கு நான் சம்மதிக்கவில்ல்லை. ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்காக அவரை சந்திக்க அனுமதி கோரியுள்ளேன். இதுவரை எனக்கு அனுமதி கிடைக்கவில்லை என ஆர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் Bloody Beggar படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top