Connect with us

பாலாவின் துன்புறுத்தலால் தான் வணங்கான் படத்தில் இருந்து விலகினேன் – பிரபல நடிகை பகீர் தகவல்..!!

Cinema News

பாலாவின் துன்புறுத்தலால் தான் வணங்கான் படத்தில் இருந்து விலகினேன் – பிரபல நடிகை பகீர் தகவல்..!!

பாலாவின் வணங்கான் படத்தில் முதலில் ஒப்பந்தமான பிரபல நடிகை அப்படத்தில் இவர்ந்து விலகியதற்கு பாலா தான் காரணம் என ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார்.

உணர்ச்சி பொங்கும் படங்களுக்கு பெயர் போன இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா . இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இவரது படங்கள் காலம் கடந்து பேசும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வணங்கான். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் சூர்யா சில பல காரணங்களால் பாதிலேயே வெளியேறினார் .

இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமானார் . அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டிருந்தது . அந்த டீசருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் நடிகை மமிதா பைஜூ, வணங்கான் படத்தில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் .

வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன்; அப்படத்தில் ‘வில்லடிச்சா மாடன்’ என்றொரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன்.

இப்படி இருக்க திடீரென வந்த இயக்குநர் பாலா சார் என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். அப்போது நான் அதற்கு தயாராக இருக்கவில்லை, அதனால் ரொம்பவே பதற்றமாகிவிட்டேன். இதனால் கோபமடைந்த பாலா சார் என்னை தோள்பட்டையில் அடித்தார்.

பின்னர் வந்து நான் அவ்வபோது திட்டுவேன், அடிப்பேன் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என அவரே சொன்னார் . அவர் சொன்னதுபோல் பல முறை அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன் என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் அந்த படத்தில் இருந்து விலகினேன் என நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் - அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

More in Cinema News

To Top