Connect with us

🎬 “மீண்டும் நம்பிக்கை கண்டேன்…” – சமந்தாவின் மனம் திறந்த நெகிழ்ச்சியான பேட்டி!

Cinema News

🎬 “மீண்டும் நம்பிக்கை கண்டேன்…” – சமந்தாவின் மனம் திறந்த நெகிழ்ச்சியான பேட்டி!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல்முறையாக உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களை கடந்து மீண்ட அவர், சமீபத்திய பேட்டியில் தனது மனநிலையின் மாற்றத்தை பகிர்ந்துள்ளார்.

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் ஒருவரை நம்புவது சாத்தியமில்லை என்று எண்ணியதாக கூறிய சமந்தா, காலப்போக்கில் அந்த எண்ணம் மாறியதாக தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் கிடைத்த அன்பும் ஆதரவும் தான் மீண்டும் தன்னை நம்பிக்கையுடன் நிற்கச் செய்ததாகவும், அந்த மாற்றத்திற்கு காரணமான முக்கியமான நபராக ராஜ் நிதிமோருவை குறிப்பிட்டும் அவர் பேசியுள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுள் அமைதி மற்றும் சுதந்திரமான உணர்வு வந்துள்ளதாகவும், தற்போது வாழ்க்கையை எந்த ஒரு நடிப்பும் இல்லாமல் இயல்பாக வாழ்கிறேன் என்ற உணர்வு கிடைத்துள்ளதாகவும் சமந்தா தெரிவித்தார். இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 🎬✨

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ஜன நாயகன்’க்கு புதிய சிக்கல்! ஓடிடி உரிமம் ரத்து

More in Cinema News

To Top