Connect with us

IPL 2024 : சென்னை அணியின் டார்கெட் என்னவாக இருக்கும் – டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு..!!!

Featured

IPL 2024 : சென்னை அணியின் டார்கெட் என்னவாக இருக்கும் – டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் CSK – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 1 போட்டியில் தோல்வி 2 போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 3 ஆம் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி இரண்டு போட்டியில் தோல்வி பெற்று ஒரு போட்டியில் வெற்றியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “Love Insurance Kompany” OTT ரிலீஸ்! வீட்டிலேயே கலக்கும் ரொமான்ஸ் + காமெடி 🎬📺

More in Featured

To Top