Connect with us

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் – லக்கோவை 10 ஓவருக்குள் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி..!!

Featured

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் – லக்கோவை 10 ஓவருக்குள் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி..!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 57 ஆவது லீக் போட்டியில் SRH – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் . இதையடுத்து லக்னோவின் ரன்குவிப்பை தவிர்க்கும் வகையில் ஹைதராபாத் அணி பந்துவீசியது.

இந்த பக்கம் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். ஆரம்பம் முதல் ஹைதராபாத் பந்துகளை எதிர்கொள்ள இந்த ஜோடி தடுமாறியது.

போக போக ரன் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தபோது டி காக் 2 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்டோனிஸ் 3 ரன்னில் வந்த வேகத்தில் சென்றார்.

இதையடுத்து கேப்டன் ராகுலும் 29 ரன்னில் ஆட்டமிழக்க ஹைதராபாத் பந்து வீச்சில் பட்டயகிளப்பியது.
அடுத்ததாக களம் கண்ட இளம் வீரர்கள் நிகோலஸ் பூரான் மற்றும் பதோனி முடிந்த வரை போராடி ஸ்கோர் எடுக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 165 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர் . ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 5 ஓவர்களுக்குள் அரைசதத்தை கடந்து அசத்தியது .இருவரும் சிக்ஸராகள் மற்றும் பவுண்டரிகளாக விளாசி 9.5 ஓவரில் 167 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.

போட்டிக்கு பின் பேசிய SRH அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் கூறியதாவது :

நடப்பு ஐபிஎல் தொடரில் எங்கள் அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால், வெறும் 10 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்தது விசித்திரமானது” – எனக்கு சிறப்பான தரமான பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளார்கள் என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  PBKS VS RR : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு..!!

More in Featured

To Top