Connect with us

“பாப்கார்ன் ரெடி பண்ணுங்க மக்களே” தனுஷின் ராயன் பட ஓடிடி அப்டேட் இதோ..!!

Cinema News

“பாப்கார்ன் ரெடி பண்ணுங்க மக்களே” தனுஷின் ராயன் பட ஓடிடி அப்டேட் இதோ..!!

தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் சில அற்புதமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திரையுலகில் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் பாடகராக , பாடலாசிரியராக கலக்கி வந்த இவர் ராயன் என்ற தனது 50 ஆவது படத்தின் மூலம் மிரட்டலான இயக்குநராகவும் அவதரித்துள்ளார்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வந்த நிலையில் வசூலிலும் தூள் கிளப்பியது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாகவும் இத்திரைப்படம் ஆக்ஸ்ட் 30 தேதி ஓடிடியில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top