Connect with us

“விஷால் 34 படத்தின் Title குறித்த அறிவிப்பு வெளியானது! தேதியை அறிவித்த படக்குழு?!”

Cinema News

“விஷால் 34 படத்தின் Title குறித்த அறிவிப்பு வெளியானது! தேதியை அறிவித்த படக்குழு?!”

ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நடிகர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் இயக்குநராக விஷால் மாறியுள்ளார். அண்மையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார்.

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்து முடிந்தது. இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக கனல் கண்ணன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

இவர் இதற்கு முன் விஷாலுடன் சண்டக்கோழி, திமிரு, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்ன அறிவிப்பு வெளியானது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top