Connect with us

தலைக்கு மேல் வெள்ளம் போனாலும் தைரியமா நின்னு ஜெயிக்கிறதுதான் சென்னை மக்களின் சக்தி – வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்

Featured

தலைக்கு மேல் வெள்ளம் போனாலும் தைரியமா நின்னு ஜெயிக்கிறதுதான் சென்னை மக்களின் சக்தி – வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்

சென்னையை வரலாறு காணாத வகையில் புரட்டி போட்டு வரும் மிக்ஜாம் புயலால் தற்போது சென்னை மாநகரமே நீருக்குள் மூழ்கியுள்ள நிலையில் தலைக்கு மேல் வெள்ளம் போனாலும் தைரியமா நின்னு ஜெயிக்கிறதுதான் சென்னை மக்களின் சக்தி என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால் சென்னை மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது . கனமழை காரணமாக சென்னையில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குளேயே முடங்கியுள்ளனர்.

சென்னை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்சார வசதியும் இல்லாததால் தற்போது பொதுமக்கள் அனைவரும் செய்வதறியாது குழம்பி போய் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை வெள்ளம் குறித்தும் சென்னை மக்களின் மன உறுதி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இந்த புயல் #CycloneMichaung பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது.சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க #ChennaiFloods என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top