Connect with us

ஹன்சிகா – சோஹைல் விவாகரத்து! 4 ஆண்டுகளில் முடிந்த திருமணம்

Cinema News

ஹன்சிகா – சோஹைல் விவாகரத்து! 4 ஆண்டுகளில் முடிந்த திருமணம்

தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்துடன் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமண விழாவில் இருவரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணம் ரசிகர்களிடையே பெரிய பேசுபொருளாகவும் இருந்தது.

திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக அவர்கள் குறித்து பிரிவு தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கிய நிலையில், தற்போது அவர்கள் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியாகியதுடன் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ஹன்சிகா அல்லது சோஹைல் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவை கலங்க வைத்த R.B. Choudary மறைவு!

More in Cinema News

To Top