Connect with us

சரியாக போகவில்லை, ஆனால் எந்த வருத்தமும் இல்லை – ஜி.வி.பிரகாஷ் பேட்டி..

Featured

சரியாக போகவில்லை, ஆனால் எந்த வருத்தமும் இல்லை – ஜி.வி.பிரகாஷ் பேட்டி..

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் ஜீ.வி.பிரகாஷ். குழந்தை பாடகராக அறிமுகமான இவர், இசையமைப்பாளராக “வெயில்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடிப்பில் “கிங்ஸ்டன்” திரைப்படம் வெளியானது. இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“சினிமா துறையில் 20 ஆண்டுகள் இருந்ததால், என்னால் பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என அனைத்தையும் எதிர்கொள்ள முடிகிறது. இந்த அனுபவம் எனக்கு பெரிதாக உதவியிருக்கிறது. கதைக்கு ஏற்ப இசையமைக்கிறேன். வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது, அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன். நான் நடித்து, இசையமைத்து, தயாரித்த “கிங்ஸ்டன்” திரைப்படம் சரியாக போகவில்லை. ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

ஒரு படம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா, எனது இசை ஹிட் ஆகுமா இல்லையா என்பதில் கவலைப்படாமல், கடினமாக உழைப்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்.” என்று கூறி இருக்கிறார்.  

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதான்..

More in Featured

To Top