Connect with us

அடுத்த படத்தில் ரஜினியின் மாஸ் காம்போ: முன்னணி இயக்குநர் இணைப்பு!

Featured

அடுத்த படத்தில் ரஜினியின் மாஸ் காம்போ: முன்னணி இயக்குநர் இணைப்பு!

நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் முதல் முறையாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். இதன் பின், நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த படத்தின் பின்பு ரஜினி “ஜெயிலர் 2” படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்து, ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக கூறப்படுகிறது. “பேட்ட” படத்தை இயக்கிய கார்த்திக், இப்போது ரஜினியை தனது அடுத்த படத்தில் இயக்கப்போகிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top