Connect with us

Good Night பட நடிகைக்கு திருமணம் முடிந்தது – வைரல் போட்டோஸ்

Cinema News

Good Night பட நடிகைக்கு திருமணம் முடிந்தது – வைரல் போட்டோஸ்

Good Night பட நடிகை மீதாவுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முதல் நீ முடிவும் நீ என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மீதா.

தனது கள்ளம்கபடம் இல்லாத நடிப்பாலும் குழந்தை தனமான குரலாலும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்துள்ள இவருக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்தவகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் Good Night . மணிகண்டன் , ரமேஷ் என ஏராளமான இளம் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்த நடித்த இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று சூப்பர் டூப்பர் ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வரும் நடிகை மீதாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடைபெற்றது .

இந்த இனிமையான செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் மீதாவே மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

வழக்கம் போல் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : தொடர் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்..? டெல்லியுடன் குஜராத் இன்று மோதல்..!!!

More in Cinema News

To Top