Connect with us

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

Cinema News

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி தான் கிருத்திகா.

சினிமா மீது அதீத காதல் கொண்ட கிருத்திகா ‘வணக்கம் சென்னை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் . இந்த படம் பட்டி தொட்டி எங்கும் செம பேமஸ் ஆக முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .

இதையடுத்து சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘காதலிக்க நேரமில்லை’.

ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top