Connect with us

விரைவில் OTTக்கு வரும் அரண்மனை 4 – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

விரைவில் OTTக்கு வரும் அரண்மனை 4 – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

சுந்தர்.சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட ‘அரண்மனை 4’ திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் அனைத்து பாகங்களுக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .

அந்தவகையில் இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள அடுத்த படம் தான் அரண்மனை 4 . சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மற்ற பாகங்களில் இசையமைத்த ஹிப்ஹாப் ஆதி தான் அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார் .

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

திரையரங்குகளில் சுமார் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் விரைவில் OTT தளத்திலும் வெளியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ஹாட்ஸ்டார் OTT-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விடாமுயற்சிக்கு முன் வரும் 'குட் பேட் அக்லி': தயாரிப்பாளர் தகவல்..

More in Cinema News

To Top