Connect with us

இன்டாகிராமில் வந்த Link-ஐ க்ளிக் செய்ததால் பணத்தை இழந்த பெண்..!!

Featured

இன்டாகிராமில் வந்த Link-ஐ க்ளிக் செய்ததால் பணத்தை இழந்த பெண்..!!

இன்டாகிராமில் வந்த Link-ஐ க்ளிக் செய்து இளம் பெண் 1.94 லட்சம் வரை பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய 2கே காலகட்டத்தில் ஒரு பக்கம் டெக்னாலஜி நம்மை அசுர வேகத்தில் வளர்த்து வந்தாலும் அதே டெக்னாலஜி நம்மை அடிமை படுத்தி சீரழியவும் வைக்கிறது.

அந்தவகையில் கர்நாடகா மாநிலத்தை சேந்த அர்ச்சனா என்ற பெண் அமேசான் நிறுவனத்தில் வேலை என இன்டாகிராமில் வந்த Link-ஐ க்ளிக் செய்ததால் 1.94 லட்சம் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோசடி நடந்தது எப்படி..?

பகுதிநேர வேலை தேடிக்கொண்டிருந்த அர்ச்சனா இன்ஸ்டாவில், அமேசான் நிறுவனத்தில் வேலை எனப் பார்த்ததும் அந்த லிங்கை க்ளிக் செய்துள்ளார். உடனே அவரின் வாட்ஸ்அப்பிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

முதலில் அவரை நம்ப வைப்பதற்காக சில வேலைகளை கொடுத்துள்ளனர். பின் பணம் செலுத்தினால் அதிகம் சம்பாதிக்கலாம் என அவர்கள் கூறியதை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக UPI மூலம் 1.94 லட்சம் வரை செலுத்தியுள்ளார்.

பின் லாபத்தை எடுக்க முயன்றபோது அவர்களை தொடர்பு கொள்ளமுடியாமல் போனது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top