Connect with us

கஜினி படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்தது..வெளியான போட்டோஷூட் புகைப்படங்கள்!

Ghajini_2

Cinema News

கஜினி படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்தது..வெளியான போட்டோஷூட் புகைப்படங்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா-அசின் இவர்கள் மூவரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது கஜினி..இந்த படம் பற்றி யாராவது ஒருவர் கூட பேசி வருவர்..அப்படி ஒரு சிறந்த படம் தான் இது தமிழில் சிறந்த இடத்தை பிடித்த படமாகும்…

கடந்த 2005ம் ஆண்டு வெளியான இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.அனைவரும் இதனின் அடுத்த பாகம் ஏதாவது வருமா என்று கூட முருகதாஸ் அவர்களிடம் கேட்டனர் ..

தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த கஜினி திரைப்படத்தை பாலிவுட்டின் டாப் நாயகன் அமீர்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியிலும் இயக்கியிருந்தார்…அங்கும் இந்த படம் மிக பல பெரிய அளவில் பேசப்பட்டு இருந்தது…இப்படி மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித்தின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படத்தின் போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது….இந்த போட்டோஷூட் எப்போது எடுத்து என்றால் முருகதாஸின் கஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அஜித் போட்டோ ஷுட்டும் நடத்தியுள்ளார் பின்பு சில தயாரிப்பு நிறுவன பிரச்சனை காரணங்களால் வெளியேறியிருக்கிறார்.

தற்போது அந்த படத்திற்காக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது…அப்போதே செம ஸ்டைல் காண்பித்து இருக்கின்றார் அஜித் அவர்கள் என சொல்லி ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top