Connect with us

துருவ நட்சத்திரம் ரிலீசில் இதுதான் சிக்கலா…இவரும் காரணமா??

Cinema News

துருவ நட்சத்திரம் ரிலீசில் இதுதான் சிக்கலா…இவரும் காரணமா??

சியான் விக்ரம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம். கெளதம் மேனன் இயக்கத்தில் ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று ரிலீஸாகவிருந்தது…பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் இல்லாமல் இருக்கின்றது..

கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது…கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் இப்போது வரை தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது…இதனை போலவே தான் என்னை நோக்கி பாயும் தொட்டவும் சந்தித்தது…

இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே படங்களில் நடிக்கத் தொடங்கினார் கெளதம் மேனன். அந்தளவிற்கு துருவ நட்சத்திரம் படத்தை தனது ட்ரீம் மூவியாக பார்க்கிறார் கெளதம்…சிம்புவை வைத்து சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்கவிருந்தாராம் கெளதம் மேனன்…இதற்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால், கெளதம் மேனன் சொன்னபடி சூப்பர் ஸ்டார் படமும் எடுக்கப்படவே இல்லை…அவரும் 2.40 கோடி ரூபாயை All In Pictures தயாரிப்பு நிறுவனதிற்கு..திருப்பிக் கொடுக்கவில்லை இதன் காரணமாக தங்களுக்கு பணம் தராமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது என அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது…இதனால் தான் இந்த பிரச்சனை இன்றும் முடியாமல் இருந்து வருகின்றது..

அதனை போல சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்ததற்காக தனக்கும் சம்பள பாக்கி இருப்பதாகவும் குற்றத்தை தெரிவித்துள்ளாராம்…அதனால் இன்னுமும் அப்செட் ஆகி இருக்கின்றார் கவுதம் மேனன்,அதனால் சிம்புவும் முதுகில் குற்றிவிட்டதாக சொல்லப்படுகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் - எந்த படம் தெரியுமா..?

More in Cinema News

To Top