Connect with us

கேம் சேஞ்சர் படத்தால் ஏற்படுத்திய அஞ்சலியின் எமோஷனல் வேதனை..

Featured

கேம் சேஞ்சர் படத்தால் ஏற்படுத்திய அஞ்சலியின் எமோஷனல் வேதனை..

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்கும் அஞ்சலி, தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளை பெற்றார். கடந்த காலங்களில் அவர் நடிப்பில் வெளியான ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் கவனம் பெற்றது, மற்றும் வரவிருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படங்களின் மூலம் தொடர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்க இருக்கிறார்.

அஞ்சலி, ‘கேம் சேஞ்சர்’ படம் பற்றி சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில், “இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. ஷங்கர் என்னிடம் கதை சொல்லும் போது, அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் எனக்கு என் அம்மாவின் நினைவுகள் வந்துவிட்டன. ஏனெனில் என் அம்மாவின் பெயரும் பார்வதி தான்” என்று கூறினார்.

மேலும், “இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு மிகவும் கடுமையான முயற்சி தேவைப்பட்டது. இதற்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்று நம்புகிறேன். ‘கேம் சேஞ்சர்’ என் கேரியரில் ஒரு சிறந்த படம்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 36 மில்லியன் லைக்ஸால் இணையத்தை குலுக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண பதிவு!

More in Featured

To Top