Connect with us

IPL மேட்ச் பார்க்க இலவச பயணம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக போக்குவரத்து துறை..!!

Featured

IPL மேட்ச் பார்க்க இலவச பயணம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக போக்குவரத்து துறை..!!

நடப்பாண்டுக்கான IPL தொடர் நாளை முதல் கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் அணைத்து IPL போட்டிகளையும் பார்க்க்க வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

நாளை நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெற்ற நிலையில் டிக்கெட்டுகள் அனைத்தும் வழக்கம் போல் சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரத்துடசன் நடைபெற இருக்கும் போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிறப்பு சலுகை ஒன்றை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

போட்டிகள் நடைபெறும் நாட்களில் போட்டிக்கான டிக்கெட்டை காட்டி ரசிகர்கள் மாநகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணிநேரம் முன்பு மற்றும் பின்பு தான் இந்த இலவச பயண சலுகை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த இலவச பயண சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு கிடையாது என்றும் தமிழக போக்குவரத்து துறை தெள்ளத்தெளிவாக அறிவித்துள்ளது .

இந்நிலையில் நாளை நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரு பெரும் OTT தளங்களில் நகுலின் வாஸ்கோடகாமா திரைப்படம்..!!

More in Featured

To Top