Connect with us

எப்பா சாமி செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது..!! கார் மொட்டைமாடியில் அமர்ந்து மன்சூர் அலிகான் கலகல பேச்சு..

Cinema News

எப்பா சாமி செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது..!! கார் மொட்டைமாடியில் அமர்ந்து மன்சூர் அலிகான் கலகல பேச்சு..

நான் வீட்டை கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பித்தேன் ஆனால் செம்பரம்பாக்கம் மீன் என் வீடு தேடி வந்துவிட்டது என காரின் மேல் அமர்ந்து கொண்டு தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் .

தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் கொடூர வில்லனாக உருமாறிய மன்சூர் அலிகான் அடுத்தடுத்து பல படங்களில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .

இந்நிலையில் தற்போது வெகு சில படங்களில் மட்டும் நடித்து வரும் அவர் லோகேஷ் மற்றும் விஜய் காம்போவில் உருவான லியோ படத்தில் நடத்தியிருந்தார் . திரையுலகில் வில்லனாக இருந்தாலும் எப்போதும் காமெடியாக பேசும் நடிகர் மன்சூர் அலி கான் அதே காமெடியால் அவ்வப்போது அவதி பட்டு வருகிறார். அப்படி அவர் திரிஷா பற்றி பேசியது பெரும் சர்ச்சை ஆகி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.

இந்நிலையில் தற்போது சென்னை வெள்ளம் பற்றி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மன்சூர் அலி கான் . அந்த வீடியோவில் அவர் கூறியதாவது :

நான் அரும்பாக்கத்தில் இருக்கிறேன். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. டேம் தண்ணி திறந்துவிட்டால் தண்ணீர் வந்துவிடும். ஒண்ணுமே பண்ண முடியாது.

எல்லாரும் தாழ்வா வீட்டை கட்டிட்டாங்க. நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பிவிட்டேன். ஆனா செம்பரம்பாக்கம் மீன் என் வீடு தேடி வருது . வறுத்து சாப்பிட்டது போக மிச்சம் கொஞ்சம் மீன் இருக்கு. இனி பொறிச்சி சாப்பிடணும்.

இவை அனைத்துக்கும் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசையும் குறை சொல்லிட்டு இருக்க முடியாது. பல இடங்களில் ஏரியை ஆக்ரமித்து பலர் வீடு கட்டப்பட்டு இருப்பதால் இந்த வேதனையை தாங்க வேண்டியதாக இருக்கு என் அவரது பாணியில் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவின் படத்தை தயாரிக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் - வைரலாகும் ப்ரோமோ வீடியோ

More in Cinema News

To Top