Connect with us

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்..!!

Featured

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தது .

இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது .

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் , ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும் , டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது .இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டர்பனில் இப்போட்டி நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாதிக்குமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் .

இந்நிலையில் இன்று நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ட்ரெண்டி உடையில் ஆண்ட்ரியாவின் போட்டோஷூட் Viral..

More in Featured

To Top